தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதுடன், தலைப்புடன் கூடிய முதல் பார்வை போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகர்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அந்த போஸ்டர்களில் தளபதி 66 எதிர்வரும் பொங்கள் தினத்தன்று வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தளபதி விஜய் நடித்த, திருப்பாச்சி, நண்பன், போக்கிரி, மாஸ்டர் உட்பட பல திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.