Monday, June 22, 2026
26.7 C
Colombo
அரசியல்அரசு பெட்ரோல், டீசல் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குறதாம்

அரசு பெட்ரோல், டீசல் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குறதாம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை தற்போதைய விலையில் எரிபொருளை வழங்கினால், CEYPETCOTவுக்கு மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சிடம் இருந்து 550 மில்லியன் டொலர்களை பெற வேண்டியிருக்கும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு விலை திருத்தம் செய்த பின்னரும் தாம் நட்டத்தையே சந்தித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை மக்களுக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 87 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசாங்கம் மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்காக 313 ரூபாவை செலவழித்து வருவதாகவும், டீசல் மற்றும் பெட்ரோலுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஏற்படும் நட்டத்தை குறைப்பதற்கும் எதிர்கால எரிபொருள் கொள்வனவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் LIOC மற்றும் CPC ஆகியன அமைச்சரவையில் வெளிப்படையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles