Friday, October 31, 2025
31 C
Colombo
சினிமாபிரபல நடிகரை அடித்தார் கீர்த்தி

பிரபல நடிகரை அடித்தார் கீர்த்தி

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் எதிர்வரும் 12 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், படத்தின் பாடல் ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோது, மகேஷ் பாபுவின் முகத்தில் தவறுதலாக கீர்த்தி சுரேஷ் அடித்துள்ளார்.

இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்து விட்டது. தெரியாமல் மகேஷ் சாரின் முகத்தில் அடித்து விட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார்.

ஆனால், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அதனை அவர் லேசான விசயங்களில் ஒன்றாக எடுத்து கொண்டார் என கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles