2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை வரலாற்றுத் தவறு என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பல காரணிகள் பங்களித்ததாகவும், 50 மில்லியன் டொலர் கூட கையிருப்பில் இல்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதில் தாமதம், வரி குறைப்பு, கடன்களை மறுசீரமைக்காதது மற்றும் கடன் தேவைப்படும் போது ரூபாவின் மதிப்பை குறைக்க தவறியமை என்பனவே அவற்றுக்கு பங்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.