Sunday, May 11, 2025
27 C
Colombo
அரசியல்திரு நடேசன் செய்த ஊழல் வெளியானது

திரு நடேசன் செய்த ஊழல் வெளியானது

திரு நடேசன் செய்த ஊழல் தொடர்பில் அனுர குமார திஸாநாயக்க MP வெளிப்படுத்தியுள்ளார்.

”அண்மையில் பென்டோரா ஆவணங்கள் வெளியானது. அதில் சுமார் 160 மில்லியன் டொலர்கள் திரு நடேசன் மற்றும் நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திரு நடேசனின் பெயரில் தான் பசில் ராஜபக்ஷவின் பல சொத்துகள் காணப்படுகிறது. பிரசித்தி பெற்ற ‘கிங் நில்வலா’ என பணப் பரிவர்த்தனை முறையொன்று உள்ளது. அது நாட்டில் தேர்தல் நடைபெறும் போது அனைத்து அமைச்சுகளினதும் கொடுக்கல் வாங்கல்கள், செலவுகள், அத்தியாவசிய விடயங்கள் தவிர்த்து அனைத்து பரிவர்த்தனைகளும் இடைநிறுத்தப்படும். அதன்போத நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் ஐவன் டி சில்வா அப்போதைய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்தார்.

2014 இல் டிசம்பர் 24 ஆம் திகதி 1000 மில்லியன் டொலர் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 2015 இல் ஜனவரி முதலாம் திகதி அதே நிறுவனத்திற்கு 2009 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது. 2015 இல் ஜனவரி 6 ஆம் திகதி 1003 மில்லியன் டொலர் மீண்டும் அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.அதற்கமைய மொத்தம் 4100 மில்லியன் டொலர் குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணம் யாருக்கு வழங்கப்பட்டது? ‘சைனா நேஷனல் மோர்ச்சரி’ என்ற நிறுவனத்திடம் இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஹாங்கொங்கில் சேமிப்பு கணக்கொன்று உள்ளது. அந்த கணக்கில் இருந்து ரூத் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு பணம் அனுப்பி வைக்கப்படும். அதற்கு இதுவரை 5 மில்லியன் டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் திரு நடேசனுக்கு சொந்தமானது.”

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles