Wednesday, February 11, 2026
23.9 C
Colombo
ஏனையவைநாட்டின் அழிவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே காரணமாம்

நாட்டின் அழிவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே காரணமாம்

இலங்கையின் அழிவுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்தான் முழுப் பொறுப்பு என்றும், நாட்டின் முக்கால்வாசிக்கும் அதிகமான பொருளாதாரம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஐவரால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால், சர்வ அதிகாரி ஆட்சிதான் தொடரும் என்றும் அவர் கூறினார்.

அந்த போராட்டத்தின் விளைவாக பொருளாதாரத்தின் முக்கால்வாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மக்கள் பதவி விலக நேரிட்டதாகவும்இ அவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் நாடு முழுவதுமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles