கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகமொன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இரண்டு கொள்கலன்களைப் பயன்படுத்தி இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க பிரதிநிதியான சந்திமாவினால் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக விமான நிலைய அதிகாரசபை 93 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தற்போது நிதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள SLPP உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பாதுகாப்பான இடமாக இது பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.