சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிடத்தக்க தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் சபை அமர்வு நடைபெறுவதற்கு முன்னதாக ஒருநாளில் கட்சித் தலைவர்கள் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
இன்று கூட்டத்தில், அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர், நாட்டு நிலைமை குறித்து விளக்கமளித்தனர்.
அரசாங்கத்திடம் பணம் இல்லை, மக்களிடம் இதுகுறித்து விளக்க வேண்டும், சர்வதேச நாணய நிதியத்துடனான உதவி எவ்வாறு கிடைக்கும் போன்ற விபரங்களை அவர்கள் கூறினர்.
ஆனால் 21ஆம் திருத்தச் சட்டம் குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போது, அதுகுறித்து கலந்துரையாடப்படவே இல்லை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.