ஜனாதிபதியுடனான நாளைய சந்திப்பில் பங்கேற்பது தொடர்பில் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை பதவி நீக்கும் வரை ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்க போவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னர் அறிவித்திருந்தது.
எனினும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதி நாளைய சந்திப்பில் பங்கேற்குமாறு கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி வருகின்றனர்.
இந்தநிலையில், இது தொடர்பில் இன்று மாலை தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.