Thursday, March 13, 2025
30 C
Colombo
கட்டுரைகள்வெனிசியுலாவின் அறிகுறிகள் இலங்கையிலும்

வெனிசியுலாவின் அறிகுறிகள் இலங்கையிலும்

கடந்த சில வருடங்களாக வெனிசியுலா கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.

பணவீக்கம், மின்வெட்டு, உணவுத் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு மற்றும் எகிறும் விலைவாசி போன்ற விடயங்களால் அந்நாட்டு பிரஜைகள் நாட்டை விட்டு வெளியெறி வருகின்றனர்.

வெனிசியுலாவின் பணவீக்கம்

இவ்வாறானதொரு நிலையில், நிக்கலொய் மதுரோ மேலும் 6 வருடங்களுக்கு வெனிசியுலாவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

அவரின் ஆட்சிக் காலத்தில் வெனிசியுலா பொருளாதாரத்திற்கு என்ன நடந்தது?

-வெனிசியுலா பொல்வியரின் (நாணய மதிப்பு) படிப்படியாக வீழ்ச்சியடைந்தது
-பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தது
-பணவீக்கம் அதிகரித்தது
-தற்போது வெனிசியுலாவின் பணவீக்கம் 1,300,000% ஆக பதிவாகியுள்ளது
-19 நாட்களுக்கு ஒரு தடவை பொருட்களின் விலை இரட்டிப்பாகும்

  • உதாரணமாக அங்கு தேநீர் கோப்பையொன்றின் விலை 400 பொல்வியர்களாகும். (0.62 டொலர்கள்)
  • அந்நாட்டில் பொருட்கள் வாங்க வேண்டிய தேவையான பணம் பின்வருமாறு:

வெனிசியுலா என்பது செல்வந்த நாடாக தகுதி பெற்றிருந்த ஒரு நாடாகும். ஏனென்றால் அங்கு பரந்த எரிபொருள் வளம் காணப்படுகிறது.

இதனால் அவர்கள் எரிபொருள் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்துள்ளனர். அதற்கமைய, அங்கு ஏற்றுமதியில் 95% எரிபொருளை மட்டுமே சார்ந்திருந்துள்ளது.

எனினும் 2014 இல் எரிபொருள் விலை குறைவடைந்ததை அடுத்து, அவர்களின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

இதனால் அங்கு இறக்குமதி செலவு அதிகரித்ததுடன், ஏற்றுமதி வருமானம் சரிவடைய ஆரம்பித்துள்ளது.

வெனிசியுலா தற்போது முகங்கொடுக்கும் பணவீக்கத்திற்கு இதுவே காரணமாகும்.

-இந்த பணவீக்கம் அதிகரிப்பால், புதிய நாணயத் தாள்கள் அச்சடிக்கப்பட்டதுடன், பல நாடுகளில் கடன் வாங்க நேரிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளின் படி வெனிசியுலாவின் மொத்த சனத் தொகையில் 10 சதவீதமானோர் நாட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்கள் கொலம்பியா, பேரு, சிலி மற்றும் தெற்கு பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வெனிசியுலா பிரஜைகள் இடம்பெயர்ந்த நாடுகள்

தற்போது அந்நாட்டு பிரஜைகள் குறைந்தபட்ச மாத சம்பளம் 4500 பொலிவர்களாக உள்ளது. நாட்டின் பல்பொருள் அங்காடிகளுக்குள் பொருட்கள் இல்லாமல் வெற்றிடமாக உள்ளன.

அத்துடன், தொடர் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்றன அங்கு அமுலாகின்றன.

இவ்வாறான அறிகுறிகள் நமது நாட்டிலும் தென்பட ஆரம்பித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

ஒரே பொருளில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles