Tuesday, August 5, 2025
27.2 C
Colombo
அரசியல்நாட்டை மீட்டெடுக்க தயார் - சஜித்

நாட்டை மீட்டெடுக்க தயார் – சஜித்

நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி இன்று (27) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பேரணி இன்று கடுகண்ணாவ பகுதியில் ஆரம்பித்ததுடன் கலிகமுவ பகுதி வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பேரணி, மே தினத்தன்று, கொழும்பை வந்தடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெரும்பான்மையான மக்கள் பலத்தை தமது கட்சிக்கு வழங்கினால், நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்க தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles