Wednesday, March 25, 2026
30 C
Colombo
அரசியல்சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம்

சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம்

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன், சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர்  சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தான் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதல் கட்டமாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles