புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வரிச்சலுகைகளை வழங்குதல் மற்றும் ரூபாவின் நிலையை பேணுதல் போன்றவை தவறான தீர்மானங்கள் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று (25) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. இதனால் மாதாந்தம் 18 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளது.
எனினும், அந்த தொகையை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் எவருக்கும் தெரியாது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.