Thursday, May 1, 2025
26 C
Colombo
சினிமாKGF 2 படத்திற்கு வந்த சோதனை

KGF 2 படத்திற்கு வந்த சோதனை

யாஷ் நடித்த ‘KGF 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் இதுவரை 700 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் கதை எனது மகனின் கதை என பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனது மகன் கேஜிஎஃப் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்ததாகவும், அங்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்கத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவி செய்ததாகவும், எனது மகன் கடந்த 1996ஆம் ஆண்டு காவல்துறையினரால சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது மகனின் கதையை தனது அனுமதியில்லாமல் படக்குழுவினர் படமெடுத்து உள்ளதாகவும் அதுமட்டுமின்றி தனது மகனை கெட்டவனாக சித்தரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என குறித்த குற்றச்சாட்டை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles