KGF படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஹேம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தமிழிலும் படங்களை தயாரித்து வருகிறது.
ஒரு புதிய அத்தியாயத்துக்கு, அழுத்தமான கதையுடன் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் சூர்யா இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் பாலாவின் புதிய படத்துக்கு பிறகு, சுதா கொங்கராவின் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.