ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு புதிய அமைச்சப் பதவியொன்றை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு பொருளாதார அமைச்சில் விசேட பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதனை நிராகரித்த அவர், தற்போது மக்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதால் தானும் மக்கள் பக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அவர் வகித்து வந்த பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.