தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ வெளிநாட்டில் சொத்து இருந்தால், அது தொடர்பில் கண்டறிந்து வழக்கு தொடருமாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
எம்மை பற்றி பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை நிரூபிக்க முடியுமாக இருந்தால் எந்தவொரு விசாரணைக்கும் செல்ல நாங்கள் தயார்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டாம்.
உலகளாவிய ரீதியில் எங்காவது எமக்கு சொந்தமான சொத்து இருந்தால், அந்நாடுகளில் வழக்கு தொடருங்கள். நாங்கள் அதற்கு முகங்கொடுக்க தயார்.
கடந்த 12 வருடங்களாக நான் எனது சொத்துக்கள் மற்றும் வருவாய் தொடர்பான அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்பித்துள்ளேன். இனியும் சமர்பிப்பேன் என அவர் மேலும் கூறினார்.