ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காணொளியைப் பயன்படுத்தி நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘மாண்புமிகு சபாநாயகரே,
இந்த சம்பவம் தொடர்பில் நாங்கள் வருந்துகிறோம்.
தாக்குதல் நடத்த அனுமதி இல்லை.ஏதோ நடந்திருக்கிறது.இதனை விசாரிக்க வேண்டும்.
ஆனால் சமூக வலைதளங்களில் காணொளிகள் பகிரப்படுகின்றன.
காவல்துறையினர் தீ வைப்பது போன்ற காணொளியொன்றும் உள்ளது.
இது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.
எரிபொருள் நிலையங்களில் சிசிடிவி உள்ளது அவற்றை ஊடகங்களுக்கு வெளியிடுங்கள்’ என கூறினார்.