அரசாங்கம் புதிதாக 17 அமைச்சர்களையும், 27 இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்துள்ளது.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் சிலர் அரசில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவிருப்பதாக அறிவித்தவர்களாவர்.
அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்காக அவர்களில் பலருக்கு 2 மில்லியன் டொலர்கள் லஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நளின் பண்டார எம்.பி நாடாளுமன்றில் வைத்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.