20ஆவது திருத்தச் சட்டத்தை இத்துச் செய்து 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்மானம் தொடர்பில் நாளை (19) அல்லது நாளை மறுநாள் (20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தால் கணிசமாக குறைக்கப்படும்.