ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலகாமல்இ நாட்டு நிலைமையை சீராக்கி ஆட்சியை தக்கவைத்து கொள்ளவதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலை வீசியுள்ளார்.
பெருமளவான பணம் மற்றும் பதவியுடன் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணுகப்பட்டிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், இவ்வாறு பசில், எம்.பிகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அவர் கூறுகிறார்.