பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றி இருந்தார்.
இந்த உரையின் மூலம் நேரடியாக கூறவிட்டாலும், தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்ற செய்தியை அவர் உறுதிபடுத்தியுள்ளார்.
அதில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் சில,.
– நாடு வரலாறு காணாத பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
– இந்த பிரச்சினையை தீர்க்கவே ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயல்படுகிறோம்.
– அரசாங்கத்தை பொறுப்பேற்க எதிர்கட்சியை கோரிய போதும், யாரும் முன்வரவில்லை.
– பாராளுமன்ற ஜனநாயகம் வேண்டாம் என கூறுவது அபாயமானது.
– இவ்வாறான போராட்டத்தின் விளைவாகவே 80களில் தமிழ் இளைஞர்கள் கிளர்ந்து, 30 வருடங்களாக நாட்டில் யுத்தம் நீடித்தது.
– மக்கள் பிரச்சினைகள் எனக்கு தெரியும்.
– நாங்கள் ஆரம்பித்த பல வேலைத்திட்டங்களை கடந்த அரசாங்கம் முன்னெடுக்காமை, இப்போதைய பிரச்சினைகளுக்கு காரணம்.
– பொருளாதார நெருக்கடிக்கு ஓரிரு நாட்களில் இல்லாவிட்டாலும், விரைவாக தீர்வு வழங்க்கப்படும்.
– எமது குடும்பம் கடுமையாக அவதூறுக்கு உள்ளாக்கப்படுகிறது – அதனை பொறுத்துக்கொள்வோம்.
– ஆனால் பாதுகாப்பு தரப்பினரை அவதூறு செய்ய வேண்டாம்.
– இப்போது இரசாயன உரத்தை தடைசெய்ய வேண்டிய காலம் இல்லை – இரசாயன உர மானியம் வழங்கப்படும்.
– ஜனநாயக பெறுமதியை பாதுகாக்கும் வகையிலான ஆளுகை தொடர்ந்து முன்கொண்டு செல்லப்படும்.
– பொருளாதார நிலைமைக்கு அரசாங்கமாக பொறுப்பேற்கிறோம்.