நிதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இன்னும் விலகவில்லை என அரசாங்கம் கூறுகிறது.
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கன்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் பதவியில் இருந்து விலகிய அலி சப்ரி, நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஒரே நாளில் பதவி விலகுவதாக அறிவித்தார்.
எனினும், அலி சப்ரியின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி இன்னும் ஏற்கவில்லை எனவும், தொடர்ந்தும் அவர் நிது அமைச்சராக பதவியில் உள்ளதாகவும் கன்சன தெரிவித்தார்.