“மொட்டு கட்சி” என சொல்லப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த உறுப்பினர்கள் புதிய அமைச்சரவை ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்றிரவு இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி 15க்கும் குறைவான அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை ஒன்று வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்த அமைச்சரவை காலப்போக்கில் அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுதும் அரசாங்கத்திற்கு 120க்கும் அதிகமான உறுப்பினர்களுடைய ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.