பல்துறை விவகாரங்கள் மற்றும் கடன் நிலைப்படுத்தலுக்கான ஜனாதிபதி ஆலோசனை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையின்படி, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் பிரதம பொருளியலாளர் சாந்தா தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் இயலுமை விருத்தி பணிப்பாளர் ஷர்மினி குரே ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முகம் கொடுத்துள்ள கடன் நெருக்கடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கும் முகமாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், தாம் பதவி விலகப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக இந்த குழுவின் நியமனச் செய்தி அமைகிறது.