அரசில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்று சுயாதீனகுழுக்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது பல முக்கிய தீர்மானங்களை எட்ட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசில் இருந்து விலகி சுயாதீனமான பத்து SLPP உறுப்பினர்கள் முதலில் இன்று (07) காலை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவர்.
பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் சுயாதீன குழுவான விமல் தரப்புடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.