தற்போதைய நிலைமையில் இருந்து நாடு மீள வேண்டுமாயின் ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ எம்.பி தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ டி சில்வா ஒரு பொருளாதார நிபுணர் எனவும், நாட்டை கட்டியெழுப்ப செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு வருடத்திற்கு எம்.பிக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாது நாட்டிற்கு முன்னுதாரணமாக செயற்படுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் விரைவில் நாடாளுமன்றத்தை சுற்றிவளைப்போம் எனவும் அவர் எச்சரித்தார்.