நாட்டின் நெருக்கடி குறித்த விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது.
இதுதொடர்பாக நேற்று (05) நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயம் ஒன்றை சபாநாயகர் தமது அறிக்கையில் குறிப்பிட தவறிவிட்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி பதவி விலகினால், அவரது பதவி காலம் நிறைவடையும் வரையில் நாடாளுமன்றினால் புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியும் என்று தாம் குறிப்பிட்டதாகவும் அது சபாநாயகர் அறிக்கையில் இல்லை என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.சுட்டிக்காட்டினார்.
இதன்போது எழுந்த அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலக மாட்டார் எனவும், இந்த சவால்களை சமாளித்து தொடர்ந்து முன்செல்வோம் என்று குறிப்பிட்டார்.