ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (5) நாடாளுமன்றில் பிரசன்னமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் நாடாளுமன்றுக்கு அருகில் போராட்டங்களை நடத்துவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அங்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்த விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.