ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (06) அவர் இதனை தெரிவித்தார்.
எம்.பிகளின் வீடுகளை சுற்றிவளைத்தல், ஆர்ப்பாட்டக்காரர்களின் நடத்தை என்பன அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.