அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குருநாகலில் இருந்து ஆரம்பமான போராட்டம் தற்போது அவரின் அலுவலகம் நோக்கி நகர்ந்தது.
இதன்போது பெருந்தெருக்கள் அமைச்சரின் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.