அனுரகுமார திஸாநாயக்க எம்.பி பயணித்த வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து ஏறியவர் யார் என நாடாளுமன்றில் வினவப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கேள்வியை கேட்டார்.
அத்துடன், அந்த நபரை உடனடியாக கண்டறியுமாறு சபாநாயகர் மற்றும் காவல்துறை மா அதிபரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
அப்பகுதியில் இருந்து சிசிரிவி கெமராக்களின் உதவியுடன் குறித்த நபரை கண்டுபிடிக்குமாறும் அவர் தெரிவித்தார்.