நடிகர் விஷால், புதுமுக இயக்குநரான வினோத் குமார் இயக்கும் ‘லத்தி’ என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.
விஷாலின் 32-வது படமான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
ராணா புரொடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனை விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
“எனது சினிமா வாழ்க்கையில் 12 ஆவது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைப்பது பெரும் மகிழ்ச்சி. என்னுடைய நண்பர் மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவை ‘லத்தி’ படக்குழு சார்பாக வரவேற்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.