வர்த்தகத்துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய பந்துள குணவர்தன, நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதி அமைச்சராக இருந்து பதவி விலகி நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி, ஒரே நாளில் பதவி விலகினார்.
இதனை அடுத்து அவருக்கு பதிலாக பந்துள குணவர்தனவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த தகவல் குறித்து அரசாங்கம் இன்னும் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.