நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று (05) நாடாளுமன்றம்ம் ஆரம்பிக்கும் போதே விசேட அறிக்கையொன்றை சமர்பித்தார்.
இதுவரை எந்த அமைச்சரும் சட்டரீதியாக பதவி விலகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த அமைச்சரும் சட்டப்படி பதவி விலகவில்லை. தனிப்பட்ட முறையில் பதவி விலகியதாக அறிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது.
நாட்டின் தற்போதைய நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். இந்த நாடாளுமன்றம் மக்களின் அதிருப்தியை புரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் நாம் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.