நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவே பொறுப்பேற்க வேண்டும் என அஜித் ஜி பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகுவதன் மூலம் இந்த நிலைமைக்கு தீர்வு காண முடியும்.
காபந்து அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் எவ்வித பயனும் இல்லை.
ஜனாதிபதி அவ்வாறு காபந்து அரசாங்கத்தை நிறுவ தீர்மானித்தால் தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவரும் அதில் பங்கேற்க மாட்டோம்.
அத்துடன், காபந்து அரசாங்கத்தை நிறுவாமல், இடைக்கால ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.