ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (04) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகிறது.
அரசாங்கத்திலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகும் என்ற அறிவிப்பையும் நேற்று (03) ஜீவன் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான முக்கிய சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.