மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியும் பிரதமரும் நன்கு அறிவதாகவும், முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை கோழையாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அனுசரணையில் நடைபெற்ற நிகழ்வொன்றினல் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளே இந்த நெருக்கடிக்கு காரணம் எனவும், அரசாங்கத்திற்குள் பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் சவால்கள் ஏற்படும் போது அவற்றை விட்டு வெளியேறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தை கண்டால் ஓடுகின்றவர்கள் அரசாங்கத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், யுத்தத்தின் இக்கட்டான காலங்களை எதிர்கொள்வதற்கு பதிலாக அதிலிருந்து தப்பி ஓட வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.