Friday, September 20, 2024
28 C
Colombo
சினிமாகமலுடன் கைக்கோர்த்தார் உதயநிதி

கமலுடன் கைக்கோர்த்தார் உதயநிதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை கமல் ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விக்ரம் திரைப்படம் எதிர்வரும் ஜூன் 3ம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும், அப்டேட் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ‘விக்ரம்’ திரைப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles