தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்ற செய்தி பொய்யானது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என அண்மைகாலமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன
இது குறித்து டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அது முற்றிலும் பொய்யானது எனவும் தமது காலம் நிறைவடையும் வரையில் தாம் பதவிலியிருந்து ஓய்வுப் பெற போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த ஜனாதிபதி மற்றும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் ரணிலுடனோ, சஜித்துடனோ தமக்கு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேநேரம், நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலை விரைவில் தீர்க்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.