சூர்யா நடித்து தயாரிக்கும் ‘சூர்யா 41’ என்ற திரைப்படத்தை இயக்குநர் பாலா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் கணக்கில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
“இன்று(28) முதல் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது, 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாலா ‘ஆக்ஷன்’ என்று கூறுவதை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் தேவை” என அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.