பிரபல இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் தற்போது ‘பிசாசு-2’ படத்தை இயக்கி வருகிறார்.
இதில் ஆண்ட்ரியா பேயாக நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், ‘‘உங்கள் படங்களின் போஸ்டர்களில் மிஷ்கின் என்ற பெயரை தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறுவதில்லையே…ஏன்?’’ என வினவப்பட்டது.
அதற்கு மிஷ்கின், ‘‘ஒரு படத்தின் போஸ்டரை பார்க்கும்போது, அது என்ன படம்? என்றுதான் முதலில் கவனிப்பார்கள். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரையும் போடுவதற்கு போஸ்டரில் இடம் இருக்காது. ட்ரெய்லரில் கூட படத்தின் கதைக்களத்தைத்தான் எதிர்பார்ப்பார்கள். பெயர்களை அல்ல…’’ என பதில் அளித்தார்.