நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த வாரம் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ மகிழுந்தை அமைச்சிடம் கையளித்தார்.
நாட்டிற்காக தான் சரியான நிலைப்பாட்டை எடுத்தால் தான், அது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளில் ஒன்றான இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஆவார்.