94 ஆவது ஒஸ்கார் மேடையில் ஹொலிவூட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெற் ஸ்மித்தை நகைச்சுவை நடிகர் க்றிஸ்ரொக் தகாத வார்த்தையால் இழிவுபடுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித் நேராக ஒஸ்கார் விருது வழங்கும் மேடைக்குச் சென்று, க்றிஸ்ரொக்கை கன்னத்தில் அறைந்து திரும்பினார்.
அண்மைக்காலமாக தமது தலைமயிரை இழந்து வருகின்ற ஜடாவை பார்த்து, க்றிஸ்ரொக் ‘தாம் ஜீ.ஐ ஜேன் 2’ திரைப்படத்துக்காகக் காத்திருப்பதாகக் கூறி அவமானப்படுத்தி இருந்தார்.
எவ்வாறாயினும், கிங் ரிச்சர்ட் திரைப்படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.
இதன்போது மேடை ஏறிய வில் ஸ்மித், நடந்த நிகழ்வுக்கு வருத்தம் வெளியிட்டதுடன், அன்பு இவ்வாறான நடவடிக்கைகளையும் செய்யத்தூண்டும்’ என்று குறிப்பிட்டார்.