Wednesday, March 25, 2026
29.5 C
Colombo
சினிமாரத்த கறையுடன் விஜய்!

ரத்த கறையுடன் விஜய்!

விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி வந்தன.

இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஜய் சட்டையில் ரத்த கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படமும், கோடாரியுடன் இருக்கும் புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் பீஸ்ட் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles