காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அண்மையில் திரையிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
இந்த திரைப்படம் வெளியாகிய முதல் 6 தினங்களில் இந்தியாவில் மட்டும் 80 கோடி ரூபா வசூல் சாதனை படைத்திருந்தது .
இந்த நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தினை தமிழ், தெலுங்கு கண்ணடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டப்பிங் செய்து விரைவில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாக இருப்பதால், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் ஏப்ரல் முதல் வாரம் தமிழில், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.