நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சஜித்தின் கட்சியை விட்டு வெளியேறி ரணிலுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (24) நாடாளுமன்றில் இந்த கருத்தை வெளியிட்டார்.
சுமார் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த குழுவில் இருப்பதாகவும், இந்தப் பட்டியல் எந்த நேரத்திலும் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.