பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான்பரப்பையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கையின் கடல்சார் மீட்புப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க 60 இலட்சம் டொலர் அளிக்க இந்தியா அனுமதி வழங்கியது. இதன் மூலம் இலங்கை கடற்பரப்பில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இந்தியா கண்காணிப்பு விமானத்தை வழங்குகிறது.
இதன் மூலம் இலங்கையின் வான்வெளி இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், “நாட்டின் வளங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படவில்லை ” என அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது