நாடாளுமன்றத்தில் இன்று (23) பெரும் அமளிதுமளி ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச உள்ளிட்ட 10 கட்சிகள் அடங்கிய குழு இன்று அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.