அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
உயர்மட்ட தூதுக் குழுவுடன் நேற்று மாலை இலங்கை வந்த அவர், இன்றைய தினம் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை, துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் மேற்பார்வை செய்கின்றார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை துணைச் செயலாளர் சந்திக்கவுள்ளார்.